
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை கொட்டிவாக்கத்தில் கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கேரம் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது,நீட் விலக்கு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதற்கான பதிலை சட்ட வல்லுனர்களிடம் கேட்டுப் பெற்று முதல்வரின் கையொப்பத்துடன் அனுப்பியுள்ளோம். மேலும் தமிழ்நாட்டிற்கு நீர் தேர்வில் இருந்து விரைவில் விலக்கு பெறப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.