AK 62 Update: 'ஏகே 62' படம் குறித்து உதயண்ணா சொன்ன விஷயம்: அப்போ சம்பவம் கன்பார்ம்.!

‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப்படத்திற்கான அறிவிப்பை ரசிகர்கள் எப்போது வெளியிடுவார்கள் என வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ‘ஏகே 62’ படத்தின் இயக்குனர் மகிழ் என்பது கன்பார்ம் ஆகிவிட்டாலும் அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் உள்ளனர் படக்குழுவினர்.

கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கே திருவிழாக்கோலம் பூண்டது. ‘வாரிசு’ படம் முழுக்க முழுக்க பேமிலி செண்டிமென்ட் கொண்ட கதையம்சமாகவும், ‘துணிவு’ படம் ஆக்ஷன் ஜானரிலும் உருவானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியிருந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீசான இதில் மூன்றாவது முறையாக அஜித், போனி கபூர், எச். வினோத் கூட்டணி இணைந்தது. மேலும் இந்தப்படத்திற்காக சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல், காதில் கடுக்கன் என வேறலெவலில் லுக்கில் அஜித் இருந்தனர். ‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஏகே 62; படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பாகவே ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இந்தப்படத்திலிருந்து விக்கி விலகுவதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அஜித்தின் புகைப்படத்தை நீக்கினார் விக்னேஷ் சிவன்.

Sivakarthikeyan: மீண்டும் மீண்டுமா..?: கார்த்தியால் சிவகார்த்திகேயனுக்கு வந்த புதிய சிக்கல்.!

‘ஏகே 62’ படத்திலிருந்து விக்கி விலகியதை தொடர்ந்து மகிழ் திருமேனி இந்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தடையற தாக்க, தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழுடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித். இதனால் இந்தப்படம் ஆக்ஷன் ஜானரில் வேறலெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஏகே 62’ பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில்
உதயநிதி ஸ்டாலின்
இந்தப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதில் மகிழ் திருமேனி இந்தப்படத்தை இயக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். எல்லோரையும் இந்தப்படம் வெற்றியடைய தானும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். ‘ஏகே 62’ படத்தை மகிழ் இயக்குவது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Legend Saravanan: உச்ச நட்சத்திரங்களுக்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்: மாஸ் காட்டுறாரே.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.