அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, வார இறுதியில் இரண்டு பெரிய அமெரிக்க வங்கிகளின் சரிவு தொடர்பான தன் இறுதி அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் “வங்கிகள் சரிவை சந்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, என்ன நடந்தது என்பது குறித்து தற்போது விளக்கமாக கூறமுடியுமா? … இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உங்களால் உறுதியளிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், மௌனமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். இடையில் மற்றொரு பத்திரிகையாளர் “மற்ற வங்கிகள் சரிவை சந்திக்குமா? எனக் கேள்வி எழுப்பியபோதும் அவர் திரும்பிக்கூட பார்க்காமல் அறையை விட்டே வெளியேறினார். ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக கருத்துத் தெரிவிப்பவர்களின், கருத்துகள் முடக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் இதுபோல பத்திரிகையாளர்களின் சந்திப்பிலிருந்து பாதியில் வெளியேறுவது இது முதல்முறையல்ல. சீனாவின் உளவு பலூன் சம்பவம் குறித்து அறிக்கையை வெளியிட்ட பிறகு, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் பாதியிலேயே வெளியேறினார்.
“Can you assure Americans that there won’t be a ripple effect? Do you expect other banks to fail?”
BIDEN: *shuts door* pic.twitter.com/CNuUhPbJAi
— RNC Research (@RNCResearch) March 13, 2023
கடந்த ஆண்டு, கொலம்பிய ஜனாதிபதியுடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்கள் கேட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரித்துவிட்டுச் சென்ற வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.