Samantha: நடிகர் தேவ்மோகனுடன் காவல் தெய்வமான பெத்தம்மா கோவிலுக்கு சென்ற சமந்தா

Samantha Shaakuntalam release: சாகுந்தலம் பட விளம்பரத்தை துவங்கும் முன்பு பெத்தம்மா கோவிலுக்கு சென்றிருக்கிறார் சமந்தா.

​சாகுந்தலம்​குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் சாகுந்தலம். அந்த படத்தில் துஷ்யந்தாக நடித்திருக்கிறார் தேவ் மோகன். சாகுந்தலம் படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் ரிலீஸ் தேதி நெருங்கிய நேரத்தில் பிப்ரவரி 17ல் சாகுந்தலம் ரிலீஸாகாது என அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

​பெத்தம்மா கோவில்​சாகுந்தலம் படத்தின் புது ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்கள். அந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியை துவங்குவதற்கு முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் பெத்தம்மா கோவிலுக்கு சமந்தா, தேவ் மோகன் உள்ளிட்டோர் சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் தான் இந்த பெத்தம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
​ரசிகர்கள்​கோவிலில் சமந்தாவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். சமந்தாவும், தேவ் மோகனும் கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து குணமாகி வரும் சமந்தா சிம்பிளாக உடை அணிந்திருந்தார். ஆனால் அவர் பார்க்க ரொம்ப சோர்வாக காணப்படுவதாக ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
​மயோசிடிஸ்​தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் சமந்தா. மேலும் யசோதா பட விளம்பர நிகழ்ச்சிகளின்போது சமந்தா அழுதுவிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள். சமந்தா தைரியமாக போஸ்ட் போட்ட பிறகு சில பிரபலங்கள் தங்களுக்கு இருக்கும் அரிய வகை நோய் பற்றி சமூக வலைதளத்தில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
​சிடாடல்​சமந்தா தற்போது ராஜ் மற்றும் டி.கே. ஆகியோரின் இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார். ஹாலிவுட் தொடரான சிடாடலின் இந்திய வெர்ஷனில் தான் சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில தொடரில் ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். சிடாடலில் சமந்தாவுடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இருவரும் உளவாளிகளாக நடிக்கிறார்கள்.

​Samantha: நடுங்கும் குளிரில் சமந்தா செய்த காரியம்: ரொம்ப தப்புமானு சொல்லும் ரசிகர்கள்

​ஆக்ஷன்​சிடாடல் தொடரில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. இதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டரை வரவழைத்திருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதால் இது தான் நடக்கும் என தன் கையில் காயங்கள் ஏற்பட்டதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் போஸ்ட் செய்தார் சமந்தா. அதை பார்த்த ரசிகர்களோ, இந்த நேரத்தில் உங்களுக்கு ஏன் அடம். ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் தேவையா என அக்கறையுடன் கேட்டார்கள்.

​Samantha: சிடாடல் தொடரில் நடிக்கும் சமந்தாவுக்கு காயம்: போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.