தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல், வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மற்றும் புறநகர்பகுதிகளில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, பரிசோதனைகளை அதிகப்படுத்தி தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளது.
அதே போல் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துவதை மீண்டும் துரிதப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என கூறியுள்ளது.
newstm.in