சென்னையில் குடிநீர் வரி செலுத்த கடைசி நாள் குறித்த அறிவிப்பை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி கட்டணத்தை வரும் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும் இயங்கும்.
அதே நேரத்தில் சனிக்கிழமை, மாத இறுதி ஞாயிறன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் வரி செலுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
கடந்த 2021-22-ம் ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சியில் 29 ஆயிரத்து 765 பேர் குடிநீர் வரி செலுத்தவில்லை. 2020-21ஆம் ஆண்டில் 12,148 பேரும், 2019-20ஆம் ஆண்டில் 10,639 பேரும் குடிநீர் வரி பாக்கி வைத்தனர்.
இதற்கு கொரோனா காலத்தில் குடிநீர் வரி செலுத்துவதை ஆன்லைன் முறைக்கு மாற்றியதே காரணம் என்கின்றனர் மக்கள். ஆனால் தற்போது கட்டணம் செலுத்தும் முறை அனைத்தும் ஆன்லைன் என்று மாறிவிட்டதால் அதற்கு ஏற்ப மாறுவது கட்டாயம்.
தற்போது வசூல் மையங்கள் திறந்திருக்கும் என்பதால் மக்கள் குடிநீர் வரியை நேரில் செலுத்தால். ஆனாலும் ஆன்லைன் மூலமாகவும் கட்டும் வகையில் தயாராக வேண்டும்.
newstm.in