புதுடில்லி :பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 13வது இடத்தில் உள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடுகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தாக்குதலின் அடிப்படையில், 10வது உலகளாவிய பயங்கரவாத பட்டியலின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
உலகளவில் பயங்கரவாதத்தால் ஏற்படும் இறப்புகள் 9 சதவீதம் குறைந்து, 6,701 பேர் இறந்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலில் தெற்கு ஆசியா மோசமான பிராந்தியமாக உள்ளது.
கடந்த 2022ல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், நான்காவது ஆண்டாக இந்த முறையும் ஆப்கானிஸ்தான் முதலிடத்தை பிடித்து உள்ளது. இங்கு, பயங்கரவாத தாக்குதலுக்கு கடந்த ஆண்டு 866 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் 643 பேர் பலியாகியுள்ளனர்.
இது, கடந்த ஆண்டைவிட 120 சதவீதம் அதிகமாகும். மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான 25 நாடுகளின் பட்டியலில், இந்தியா 13வது இடத்தில் உள்ளது. அதிக தாக்குதல்கள் மற்றும் இறப்புகளை பதிவு செய்து, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகளவில் கொடிய பயங்கரவாதக் குழுவாக ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement