மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “பிற தொழில்நுட்ப சாதனங்கள், பயன்பாடுகள் போலவே, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களும் இணையதள தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றன. இணையதள தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து அரசு விழிப்புடன் இருக்கிறது. இந்த தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது ” என்று தெரிவித்துள்ளார்.
