முக்கிய தமிழ் பிரபலம் காலமானார்..! கண் கலங்கி, கதறி அழுத பாரதிராஜா !!

1991-ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தை தயாரித்தவர் சி.என்.ஜெய்குமார். இந்த படத்தில் ராகுல், நெப்போலியன், பொன்வண்ணன் நடித்துள்ளனர். மேலும் நடிகை சுகன்யா அறிமுகமானார். இவர், பாரதிராஜாவின் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்து உள்ளார்.

சி.என்.ஜெய்குமார் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானார். அவரது உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, கண் கலங்கியபடி சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர்கள் சித்ராலட்சுமணன், முரளி, நடிகர் மனோஜ் பாரதிராஜா மற்றும் திரைப்பட இயக்குநர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இவருடைய உடல் செனாய் நகரில் உள்ள, அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற்றது. இந்த வருடம் பிறந்து 3 மாதங்கள் முடிவதற்கு முன்பே அடுத்தடுத்து சில எதிர்பாராத மரணங்கள், திரையுலக பிரபலங்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.