வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: கனடாவில் இந்திய மாணவர்கள் 700 பேரின் ‘விசா’ ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வட அமெரிக்க நாடான கனடாவில் மேற்படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள உயர்கல்வி நிறுவனத்தில் 2018ல், 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் டிப்ளமா படிப்பில் சேர்ந்தனர்.
படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த இவர்கள் நிரந்தர குடியிருப்பு கேட்டு, அந்நாட்டு குடியேற்றத் துறையில் விண்ணப்பித்தனர். அப்போது, ஆவணங்களை சோதனை செய்ததில், இவர்கள் போலி விசாவில் கனடா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலி விசா வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் கனடாவில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர். இவர்கள், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள குடியேற்ற சேவை மையம் வாயிலாக கனடா சென்றதும், ஒவ்வொருவரும் கல்வி கட்டணம் உட்பட தலா 20 லட்சம் வரை செலுத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement