மக்கள் பிரதிநிதிகளின் பணமோசடி வழக்கு பதிவு சதவீதம் குறைவு| The percentage of money laundering cases registered by peoples representatives is low

புதுடில்லி :’மக்கள் பிரதிநிதிகள் மீதான பணமோசடி தொடர்பாக பெறப்பட்ட மொத்த புகார்களில், 2.98 சதவீதம் மட்டுமே வழக்கு களாக பதிவு செய்யப்பட்டுள்ளன’ என, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மீதான சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் கீழ், 2023 ஜனவரி 31 வரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்களை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் மற்றும் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, பணமோசடி தொடர்பாக 5,906 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றில், 2.98 சதவீதம் மட்டுமே வழக்கு களாக பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்குகளில், 513 பேர் கைது செய்யப்பட்டனர். இவற்றில், 25 சதவீத வழக்குகளில் விசாரணை முடிந்துவிட்டது.

இவற்றில், 24 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில், 36 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தால், 4.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.