கிவ் : உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடரும் சூழலில், முதன் முறையாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று சென்றார்.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
தொழிற்சாலை
இந்த சண்டையால் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கில் உட்பட பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து உள்ளன.
உருக்காலைகள் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த மரியுபோல் நகரம், ரஷ்ய படைகளின் தாக்குதலில் நிலைகுலைந்தது. அந்த நகரத்தை கடந்த செப்டம்பரில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில், துறைமுக நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று சென்று, நிலைமையை ஆய்வு செய்தார்.
குழந்தைகள் மையம்
முன்னதாக, உக்ரைன் வசம் இருந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட கிரிமியா நாட்டுக்கு சென்ற புடின், அங்கு புதிதாக திறக்கப்பட்ட குழந்தைகள் மையத்தை பார்வையிட்டார்.
உக்ரைன் மீதான போரின் போது அந்நாட்டில் இருந்த குழந்தைகளை கடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, ரஷ்ய அதிபர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது, ‘வாரன்ட்’ பிறப்பித்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement