
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கீழையூர் அருகே கேரளாவில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 40 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், இந்த விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டு உள்ளது. வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்க்க கேரளாவில் இருந்து இந்த பேருந்தில் பயணிகள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாலையில் வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே சாலை ஓரத்தில் வேகத்தில் சரிந்து விழுந்துள்ளது. பேருந்தை தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், நடத்துனர் படுகாயம் அடைந்து உள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.