லண்டன் பாலத்தில் வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லொறி! அதிர்ச்சியூட்டும் வீடியோ


 பிரித்தானியாவின் லண்டன் உள்ள பாலத்தில் கார் மோதியதில் எரிபொருள் லொறி
வெடித்து சிதறி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

லொறி மீது மோதிய கார்

பிரித்தானியாவின் லண்டனிலுள்ள கோல்ட் ஸ்டார் நினைவு பாலம், தாமஸ் ஆறுக்கு மேலே நியூ லண்டனையும், குரோடோனையும் இணைக்கிறது.

இந்த பாலத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி
ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து டேங்கர் லொறி
மீது வேகமாக மோதியுள்ளது.

லண்டன் பாலத்தில் வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லொறி! அதிர்ச்சியூட்டும் வீடியோ | Fuel Tanker Truck Explodes On London Bridge Video@twitter

இதில் டேங்கர் லொறி
விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் டேங்கர் லொறி
ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

லண்டன் பாலத்தில் வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லொறி! அதிர்ச்சியூட்டும் வீடியோ | Fuel Tanker Truck Explodes On London Bridge Video@twitter

கடுமையான புகை, நம்பமுடியாத தீப்பிழம்புகள் மற்றும் குழாய்கள் வழியாக பெட்ரோல் தேம்ஸ் நதியில் கொட்டியிருக்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வைரலான வீடியோ

நூறுக்கும் மேற்பட்ட பிரித்தானிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயினை அணைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விபத்தின் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் எரிந்த லொறியிலிருந்து வெளியேறும் பெரும் கரும் புகை தெரிகிறது.

தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடியதில் அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் சேதமாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் மாகாண ஆளுநர் நெட் லாமண்ட், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இந்த விபத்தால் தேம்ஸ் நதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.