இயக்குனர் பாண்டிராஜிடம் நிலம் விற்பனை செய்வதாக ரூ 1.89 கோடி மோசடி..!

பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையை சேர்ந்த பாண்டிராஜ்.தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பாண்டிராஜ் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் என்பவர் வெள்ளனூர் கிராமத்தில் தனக்கு சொந்தமாக உள்ள ஒரு ஏக்கர் 43 சென்ட் நிலத்தில் 27 சென்ட் நிலத்தை தனக்கு கடந்த 2013ம் ஆண்டு முதலில் விற்பனை செய்வதாக 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றதாகவும்ம் ஆனால் அதன் பின்பு அந்த நிலத்தை தனக்கு பதிவு செய்யவில்லை என்றும் அது குறித்து விசாரித்த போது அந்த நிலம் நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பது தெரிவந்தது என்றும், இதேபோல் அதே பட்டா எண் கொண்ட (481) நிலத்தின் மற்றொரு பகுதியில் 54 சென்ட் நிலத்தை தன்னிடம் விற்பனை செய்வதாக கடந்த 2014 ஆம் ஆண்டு 12 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்ததாகவும் அந்த இடத்தையும் குமார் முன்பதிவு செய்து தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கடந்த 2017ம் ஆண்டு வீட்டு வேலைக்காக குமார் தன்னிடம் மூன்று லட்ச ரூபாய் வாங்கியதாகவும் அதன் பின் காரைக்குடியில் துணிக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்று 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கியதாகவும் புகாரியில் தெரிவித்திருந்த பாண்டிராஜ், அதன் பின்பு கடந்த 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டில் 69 ஆயிரத்த 840 சதுர அடி வீட்டு மனை பட்டா தன்னிடம் இருப்பதாக சொல்லியும்ம் அதை தனக்கு எழுதி தருவதாகவும், இரண்டு தவணைகளாக ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், இதே போல் ஐந்து தவணைகளாக தன்னிடம் நிலம் விற்பனை செய்வதாக குமார் ஒரு கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு நிலம் ஏதும் தனக்கு பத்திர பதிவு செய்யாமல் மோசடி செய்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் புதுக்கோட்டை நகர் பகுதியில் அவர் கூறிய வீட்டுமனைக்கு சென்று பார்த்தல் வேறு நபர்கள் வீடு கட்டி உள்ளதாகவும் தன்னை மோசடி செய்த குமார் மீது நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து பணத்தை பெற்று தரவேண்டும் எனவும் பாண்டியராஜ் புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து குமார் மீது 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த பாரிமன்னன் தலைமையிலான புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.