கணக்கு டீச்சரை மணந்த அஜித் பட வில்லன்: நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்குனு 90ஸ் கிட்ஸ் ஹேப்பி

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கோபிசந்த், ராஷி கன்னா நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஜில் தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கபிர் துஹான் சிங். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். முதல் தமிழ் படத்திலேயே கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

“California-ல இருக்க பொண்ணுனால இது எப்படி பண்ண முடிஞ்சுது” சுஹாசினி மணிரத்தினம்!
கபிர் துஹான் சிங்கிற்கும், ஹரியானாவை சேர்ந்த கணக்கு ஆசிரியையான சீமா சாஹலுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கபிர், சீமாவின் திருமணம் நடந்தது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மனைவியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் கபிர். அந்த புகைப்படங்களை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கபிர்-சீமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருமண கொண்டாட்டம் ஜூன் 21ம் தேதி துவங்கியது. ஹல்தி, மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் நடந்தது.

திருமணம் குறித்து கபிர் துஹான் சிங்கிற்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,

Ilayaraja: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய பிறகு இளையராஜா என்னை ஒதுக்கிட்டார்: பாடகி மின்மினி

இது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்திருக்கும் திருமணம். தன்னையும், தன் குடும்பத்தையும் புரிந்து கொள்ளும் ஒரு பெண் தனக்கு வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என கபிர் விரும்பினார். திரையுலகை சேராத ஒருவரை மணக்க விரும்பினார். சீமா சாஹல் வந்திருப்பதால் கபிர் சந்தோஷமாக இருக்கிறார் என்றார்.

கபிர் துஹான் சிங் தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னட படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது மராத்தி படத்திலும் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

வேதாளத்தை அடுத்து விஜய் சேதுபதியின் றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன், தெற்கத்தி வீரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் கபிர் துஹான் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அது என்ன கபிரின் திருமணத்தை பார்த்து 90ஸ் கிட்ஸ் ஹேப்பி என்று கேட்கிறீர்களா?. விஷயம் இருக்கே. காதலிக்க, திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் கிடைக்காமல் 90ஸ் கிட்ஸுகள் அல்லாடுவது அனைவருக்கும் தெரியும்.

நேத்து பிறந்த 2கே கிட்ஸுகளுக்கு எல்லாம் காதலி இருக்கிறார், திருமணம் நடக்கிறது, நாம் மட்டும் இன்னும் மொரட்டு சிங்கிளாகவே இருக்கிறோமே என 90ஸ் கிட்ஸுகள் புலம்பி வருகிறார்கள்.

இந்நிலையில் கபிர் துஹான் சிங்கின் திருமண புகைப்படங்களை பார்த்த பிறகு அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். 80ஸ் கிட்ஸான கபிருக்கே இப்பொழுது தான் திருமணம் நடந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது அவரை விட ஜூனியர்களான எங்களுக்கு திருமணம் நடக்க இன்னும் ஆண்டுகள் இருக்கிறது.

Kamal Haasan: 7 புது ரிலீஸுக்கு இடையே ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் வேட்டையாடு விளையாடு: கெத்து காட்டும் கமல்

இது தெரியாமல் கவலைப்பட்டுவிட்டோம். மேலும் 80ஸ் கிட்ஸான நடிகர் சர்வானந்தும் அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு மனைவி வர இன்னும் நேரம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டுவிட்டோம் என்கிறார்கள் 90ஸ் கிட்ஸுகள்.

இந்த 90ஸ் கிட்ஸுகளிடம் அதிகம் திட்டும், சாபமும் வாங்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான். நயன்தாராவை காதலித்தபோது அவர் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். அதை பார்த்து 90ஸ் கிட்ஸுகள் வயித்தெரிச்சலில் விக்னேஷ் சிவனை திட்டியதுடன், சாபமும் விட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.