வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 – ஏ பிரிவுகளை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.
![]() |
இதற்கான உத்தரவை அப்போதைய ஜனாதிபதி பிறப்பித்தார். இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது.
இச்சட்டப்பிரிவுகளை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வகை மனுக்கள் தாக்கலாயின. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.காவி, எஸ்.கே. கவுல், சஞ்சய் கண்ணா, சூரியகாந்த் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் வரும் 11-ம் தேதி விசாரிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement