சென்னை: தனுஷின் 50வது திரைப்படத்தின் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டு, படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தின் கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் பிலிமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
நடிகர் தனுஷ்: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை அள்ளக்கூடியவராக தனுஷ் இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹாலிவுட்,பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தனது ரசிகர்களின் வட்டத்தை பெருக்கி வருகிறார்.
கொல மாஸ் போஸ்டர்: தனுஷின் 50 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்ட நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக சன் பிக்சர்ஸ் அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சுவற்றில் சிவப்பு நிறம் வழிய தெரிய, பாறைகளுக்கு நடுவே, சட்டைப் போடாமல் ஆக்ரோஷமாக நின்றார். தனுஷின் வேற லெவல் லுக்கை பார்த்து வியந்து போனார்கள்.
விரைவில் அறிவிப்பு: தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, அமலா பால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் இயக்கி நடிக்கும் D50: நடிகர் தனுஷ், இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக D50 பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஏற்கனவே பா பாண்டி படத்தை இயக்கிய நிலையில் இது அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும், தனுஷின் 50வது படத்தின் பூஜையை சத்தமே இல்லாமல் ஈசிஆரில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.