Reshma Pasupuleti: புஷ்பா புருஷனா.. ரேஷ்மா பசுபுலேட்டியின் திருமண போட்டோஷூட்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பாக்கியலட்சுமி தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மாடல் நடிகர் நரேஷ் உடன் நடத்திய திருமண போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து சூரியுடன் ரேஷ்மா பசுபுலேட்டி செய்யும் காமெடி வேறலெவல் ஹிட்டானது.

அதன் பின்னர் விமலின் விலங்கு படத்தில் கிச்சா பொண்டாட்டியாக நடித்தும் தனது நடிப்பால் ரசிகர்களை திகிலடைய செய்திருந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி.

திருமண போட்டோஷூட்: சினிமா, சீரியல் என நடித்து அசத்தி வரும் போல்டான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளிப்படையாக அந்தரங்கம் அன்லிமிடெட் நிகழ்ச்சியை எல்லாம் சமீபத்தில் நடத்தி பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், நடிகர் நரேஷ் உடன் ரேஷ்மா பசுபுலேட்டி நடத்திய திருமண போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Reshma Pasupuleti gets trolled for her latest bridal photoshoot

நரேஷ் உடன் நெருக்கமாக: தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தனது மகனை மட்டும் தன்னுடன் வளர்த்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது மாடல் நடிகர் நரேஷ் உடன் படு நெருக்கமாக திருமண தீமில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.

ஆனால், இந்த போட்டோக்களை நடிகர் நரேஷ் கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், திடீரென தற்போது ஏன் ரேஷ்மா பசுபுலேட்டி இந்த புகைப்படங்களை ப்ரமோட் செய்கிறார் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Reshma Pasupuleti gets trolled for her latest bridal photoshoot

புஷ்பா புருஷனா: மேலும், போட்டோக்களை பார்த்த நொடியிலேயே சில நெட்டிசன்கள் அப்போ இவரு தான் அந்த புஷ்பா புருஷனா என வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் காமெடியை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

மேலும், இவங்க உண்மையாவே ஜோடிகளா என்றும் யாருடா அவன் என் ஆளு கூட என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ரசிகர்கள் இந்த போஸ்ட்டுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர். பச்சை நிற பட்டுச் சேலையில் ரேஷ்மா திருமண கோலத்திலும் பச்சை சட்டை வேட்டியில் நரேஷ் மாப்பிள்ளையாகவும் போஸ் கொடுத்துள்ளனர்.

குவியும் லைக்ஸ்: உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் நல்ல பிரைடல் போட்டோஷுட் இது என்றும் ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் இந்த போட்டோக்களுக்கு குவிந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.