மயூர்பஞ்ச், ஒடிசாவில் ஒரு பெண்ணுக்கு இரண்டாவது பிறந்த குழந்தையும் பெண்ணாக இருந்ததால், அதை அவர் 800 ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, மயூர்பஞ்ச் மாவட்டம் குந்தலாவைச் சேர்ந்த மூசு முர்மு – கராமி முர்மு தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கராமி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
தமிழகத்தில் கூலி வேலை பார்ப்பதற்காக மூசு முர்மு சென்றுள்ளார். இந்நிலையில், கராமிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே வறுமையில் உள்ளதால், இரண்டு பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என கராமி முர்மு தொடர்ந்து புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், குழந்தை எட்டு மாதமாக இருந்த நிலையில், தெரிந்தவர்கள் உதவியுடன் 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
உறவினர்களிடம் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில், ஊருக்கு திரும்பிய மூசு, இரண்டாவது குழந்தை குறித்து கேட்டபோது, இறந்து விட்டதாக கராமி கூறியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்தக் குழந்தை விற்கப்பட்டது குறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசில் மூசு புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் கராமி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கியவர்களை கைது செய்துள்ளனர். அந்தப் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement