தமிழ்நாட்டில் கொரோனா எப்படி உள்ளது? சென்னை, செங்கல்பட்டில் பாதிப்பு!

கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் உலகமே ஸ்தம்பித்தது. உடல் நலம் பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டும் பரவல் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையே இருந்தது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னர் பாதிப்பு மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது.

ஆனால் தொடர்து மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சவால் அளிக்கும் வகையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் புதிதாக வந்து கொண்டே இருந்தன. இதனால் முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் என அடுத்தடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டது.

உடல்நலம் பாதிப்பு ஒரு பக்கம் என்றால் கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல வருட சேமிப்புகள் உடனடியாக கரைந்தன. பெரும் கடனுக்குள் சிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் கொரோனாவும் பொது முடக்கமும் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் இருக்கிறது.

MLA திடீர் ஆய்வு; அரண்டு போன மருத்துவர்கள்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வந்த நிலையில் நேற்று மட்டும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் ஒருவருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தொற்று பாதித்த ஒருவர் நேற்று வீடு திரும்பினார். இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7ஆக உள்ளது. உயிரிழப்பு ஏதும் நேற்று பதிவாகவில்லை என்று மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதற்குமான அறிவிப்பை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இன்று வெளியான அறிவிப்பில், இந்தியாவில் 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,463 ஆக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.