மொபைல் போனை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்? இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்

கைப்பேசி எல்லாம் ஸ்மார்ட்போன் யுகமாக மாறி பல காலமாகிவிட்டது. நாளுக்கு நாள் வரும் புதிய அப்டேட்டுகள் மூலம் அனைத்து பணிகளையும், உதவிகளையும் மொபைல் போன் வழியாக செய்து கொள்ள முடியும். மொழி பெயர்ப்பாளர், மொழிகள்  மற்றும் மியூசிக் உள்ளிட்ட எந்த வகையான கல்வியையும் கற்றுக்கொள்வது வரை, பொழுதுபோக்குக்கு பயன்படுத்துதல், லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் பயன்படுத்தலாம். 

அந்தவகையில் என்னென்ன மாதிரியாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1. நேரடி மொழிபெயர்ப்பு: கூகுள் லென்ஸ் வசதியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். கூகுள் லென்ஸ் இன்ஸ்டால் செய்து அதன் பயன்பாட்டை ஓப்பன் செய்தால் நீங்கள் எந்த உரையையும் நேரடியாக மொழிபெயர்க்க முடியும்.

2. வாய்ஸ் உதவி கட்டளை: உங்களுக்கு அருகில் ஒலிக்கும் பாடலை அடையாளம் காண, ஷாஜாம் போன்ற பயன்பாடுகளை இனி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. “ஹலோ கூகுள், என்ன பாடல் ஒலிக்கிறது?” என்று குரல் உதவியாளர் கட்டளையை வழங்குவதன் மூலம் நீங்கள் Google ஐக் கேட்டு அது என்ன பாடல் என்பதை அறிந்து கொள்ளலாம்.

3. ரிமோட் கண்ட்ரோல் ஆக பயன்படுத்தலாம்: பல ஆண்ட்ராய்டு போன்களில் ஐஆர் பிளாஸ்டர் உள்ளது, இதை ஏசி, டிவி போன்ற சாதனங்களுடன் இணைக்கப் பயன்படுத்தலாம். இதை ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

4. மெட்டல் டிடெக்டராக பயன்படுத்தலாம்: ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் மெட்டல் டிடெக்டர் செயலிகளை டவுன்லோடு செய்வதன் மூலம் இதைச் செய்யலாம்.

5. மவுஸ் ஆக பயன்படுத்தலாம்: நீங்கள் ப்ளூடூத்-இயக்கப்பட்ட வயர்லெஸ் மவுஸைப் பயன்படுத்தினால் உங்கள் மொபைலின் செட்டிங் சென்று இணைப்பிற்குள் சென்று, புளூடூத்தை இயக்கி, சாதனங்களை இணைக்கவும். உங்கள் கம்ப்யூட்டரின் மவுஸ் சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஸ்மார்ட்போனையே மவுஸ் ஆக பயன்படுத்தலாம்.

6. ஸ்மார்ட் ஆசிரியர்: ஏற்கனவே கூறியதுபோல் உங்கள் மொபைலில் இணையம் மட்டும் இருந்துவிட்டால் போதும், யூடியூப் வழியாக உலகில் எந்த விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ அதனை வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்ளலாம். எந்த விஷயங்கள், எதுவாக இருந்தாலும் கற்றுக் கொள்ள முடியும். முனைப்பும் ஆர்வமும் மட்டுமே உங்களிடம் இருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.