அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு போறது இதுக்குதான்… பகீர் கிளப்பும் கேஎஸ் அழகிரி!

காங்கிரஸ் கட்சியில் தமிழக மாநில தலைவர்

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒரு புதிய திட்டத்தை கூட பாஜக கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டினார். தற்போது நடைபெறுவது அனைத்தும் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள்தான் என்ற அவர் தமிழகத்தில் ஒரு புதிய சாலை கூட போடப்படவில்லை என்றார்.

தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்பது இதிலேயே அப்பட்டமாக தெரிகிறது என்றும் கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீஷியஸில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியதை மேற்கோள் காட்டிய கேஎஸ் அழகிரி, இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு? என்றார்.

மேலும் டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா? என்ற அவர் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது இங்கே இருக்கும் பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான் என்றார். இப்படி பேசுவது அரசியல் ஆகிவிடுமா என்ற அவர் இதனால் யாருக்கு என்ன பலன்? அண்ணாமலை அளந்து பேச வேண்டும் என அறிவுறுத்தினார்.

செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? என்று கேள்வி எழுப்பிய கே எஸ் அழகிரி குற்றம் சுமத்திருக்கிறீர்கள் என்றும் பாஜக அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்றும் சாடினார். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.