சென்னை: நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிம்புவிற்கு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை சிம்பு கொடுத்துள்ளார். வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த ஹிட்களை சிம்பு கொடுத்துள்ளார்.
மாநாடு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் ராணா: நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது மாநாடு. படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். டைம் லூப் பாணியில் வெளியான இந்தப் படத்தின் திரைக்கதை சிறப்பாக அமைந்திருந்த நிலையில், ரசிகர்களை வெகுவாக ஈர்த்து 100 கோடி ரூபாய் கிளப்பில் படம் இணைந்தது. இயக்குநர், தயாரிப்பாளருக்கும் சிறப்பாக கைகொடுத்தது படம்.
இந்தப் படம் மாநாடு ஒன்றில் நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை ஹீரோ தடுக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டிருந்தாலும் படத்தில் டைம் லூப்பை கதையில் கொண்டுவந்து அதை சுவாரஸ்யமாக்கியிருந்தார் இயக்குநர். படத்தில் கதைக்களம் மட்டுமில்லாமல் சிம்பு, எஸ்ஜே சூர்யா என அனைவரும் சுவாரஸ்யமான கேரக்டர்களுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்தப் படம் வெளியாகி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளது.
இந்நிலையில் படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அது வொர்க் அவுட் ஆகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தக் கதையை வாங்க ஆர்வம் காட்டிய பிரபல தென்னிந்திய நடிகர் ராணாவே இந்தக் கதையில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தற்போது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவும் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ரவிதேஜாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநாடு படத்தின் இந்தி ரீமேக்கை வெங்கட் பிரபுவே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது தளபதி 68 பட வேலைகளில் பிசியாக உள்ளதால், இந்நிலையில் பிரபல இயக்குநர் பிரவீண் சட்டாரு இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
ராணாவின் தந்தையின் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை லோ பட்ஜெட் படங்களையே எடுத்துள்ளதால், இந்தப் படம் எப்படி உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ராணா அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி படங்கள் அவரது சிறப்பை கூறும் படங்களாக அமைந்த நிலையில், ஹீரோவாக களமிறங்கும் மாநாடு ரீமேக் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.