HBD Suriya: சூர்யா – ஜோதிகா காதலை பற்றி தெரிந்துகொண்ட ஏ.ஆர் ரஹ்மான்..என்ன பண்ணார் தெரியுமா ?

சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்.தொடர் வெற்றிகளை குவித்து வந்த சூர்யா இடையில் சில தோல்வி படங்களை கொடுத்து வந்தார்.அந்த சமயத்தில் தான் சுதா கொங்காராவின் இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது.

என்னதான் இப்படம் OTT யில் வெளியானாலும் சூர்யாவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. குறிப்பாக இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் சூர்யா. இதையடுத்து ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்த சூர்யா கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்தார்.

சூர்யா – ஜோதிகா திருமணம்

வெறும் ஐந்தே நிமிடங்கள் தான் சூர்யா ரோல்கஸ் ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இன்றுவரை சூர்யாவை ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலில் நடித்ததற்காக கொண்டாடி வருகின்றனர்.

HBD Suriya: சூர்யாவின் வாழ்க்கையை ஒரே வார்த்தையில் மாற்றிய ரகுவரன்..இன்றுவரை மறக்காத சூர்யா..!

இந்நிலையில் தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ஒரு ஸ்வராயசமான சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணத்திற்கு கொடுத்த பரிசு பற்றிய தகவல் தான் அது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இருந்தே காதலிக்க துவங்கிவிட்டார்கள். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள் சில்லுனு ஒரு காதல் படத்திலும் நடித்தனர். அந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார்.

ஏ.ஆர் ரஹ்மான் கொடுத்த பரிசு

அப்போது அந்த படத்தில் இடம்பெற்ற கும்மி அடி என்ற பாடலில் ஜோதிகா மற்றும் சூர்யாவிற்கு திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. எனவே அந்த பாட்டை கம்போஸ் செய்துவிட்டு இயக்குனர் கிருஷ்ணாவிடம், சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணத்திற்கு என்னோட பரிசு இந்த பாட்டு தான் என ஏ.ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைக்கேட்டு சூர்யா ஷாக்காகிவிட்டார். ஏனென்றால் அதுவரை ஏ.ஆர் ரஹ்மானுக்கு சூர்யா தான் காதலிப்பதாக கூறவில்லை. எனவே இந்த விஷயம் எப்படி ஏ.ஆர் ரஹ்மானுக்கு தெரியவந்தது என அதிர்ச்சியில் இருந்தார் சூர்யா. இந்நிலையில் சில்லுனு ஒரு காதல் படம் வெளியான ஒரே வாரத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.