`தோனி என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பெயரில் புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ஹரீஷ் கல்யாண், நதியா, இவானா ஆகியோரின் நடிப்பில் `LGM’ என்ற படத்தைத் தயாரித்து முடித்திருக்கிறார் சாக்ஷி தோனி.
இப்படத்தை ரமேஷ் தமிழ் மணி இயக்கியிருக்கிறார். தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படம் ‘LGM’ என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படம் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற `LGM’ படத்தின் நிகழ்ச்சியில் தோனியுடன் அவரின் மனைவி சாக்ஷியும் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சாக்ஷி அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய ரசிகை என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ நான் அல்லு அர்ஜுனின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அப்போது நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவை எல்லாம் கிடையாது.
எல்லா படங்களையும் யூடியூப்பில்தான் பார்த்தேன். கோல்டுமைன் புரொடக்ஷன்ஸ் தெலுங்கு படங்களை இந்தியில் வெளியிடுவார்கள். அதைப் பார்த்து வளர்ந்தவள் நான். நான் அவரின் தீவிர ரசிகை” என்று கூறியிருக்கிறார்.