Jailer: கோர்ட்டில் கேஸ்: ஒரே நாளில் ரிலீஸாகும் ரஜினியின் ஜெயிலர், மலையாள ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், தமன்னா, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
இந்நிலையில் சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் மலையாள படமும் ஆகஸ்ட் 10ம் தேதி தான் வெளியாகவிருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே ஜெயிலர் பட தலைப்பை கேரளா பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸில் தான் பதிவு செய்துவிட்டதாக சக்கீர் மடத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் படத் தலைப்பை மாற்றுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார். ஜெயிலர் என்கிற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் குழப்பம் ஏற்படும் என்றார் மடத்தில்.

ஆனால் சக்கீர் மடத்திலின் கோரிக்கையை ஏற்க சன் பிச்கர்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது சன் பிக்சர்ஸ். அதை எதிர்த்து சக்கீர் மடத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்க, இரண்டு தரப்புமே ஜெயிலர் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் உறுதியாக உள்ளன.

இரண்டு ஜெயிலர் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது குறித்து அறிந்த தமிழ் ரசிகர்களோ, எனக்குனே கெளம்பி வருவாங்களோ என நெல்சன் திலீப்குமார் புலம்புவது போன்று மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் அதாவது ஜூலை 28ம் தேதி நடக்கவிருக்கிறது. சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறாராம்.

Jailer: என்னாது, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதுனு சொன்னாரா விஜய்?

தளபதி விஜய்யிடம் கேட்டதற்கு நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் தற்போது நாட்டிலேயே இல்லை. லியோ பட வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையே தனுஷின் பிறந்தநாள் அன்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அதே நாளில் தான் தனுஷின் கேப்டன் மில்லர் டீஸர் வரவிருக்கிறது. அப்படி என்றால் ஜெயிலருடன் மோதுகிறார் கேப்டன் மில்லர் என சிலர் பேசத் துவங்கினார்கள்.

Dhanush: ரஜினிக்கு தான் தனுஷ் மீது எம்புட்டு பாசம்: இல்லைனா இப்படியொரு பர்த்டே ட்ரீட் கொடுப்பாரா!

அதை பார்த்த ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களோ, ஜெயிலர், கேப்டன் மில்லர் இடையே எந்தவித மோதலும் இல்லை. தனுஷ் பிறந்தநாள் பரிசாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடக்கிறது என தெரிவித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தில் வந்த ஹுகும் பாடலை பார்த்த ரசிகர்கள் மிரண்டுவிட்டார்கள். படம் முழுக்க தலைவர் மாஸ் காட்டப் போகிறார் என்றார்கள். ஆனால் இது மாஸ் அல்ல காமெடி படமாம். 70 சதவீதம் காமெடி காட்சிகள் இருக்கிறது என்று ஹுகும் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு தெரிவித்தாக தகவல் வெளியானது.

Jailer:ஜெயிலர் மாஸ் அல்ல காமெடி படம்: ரஜினிக்கு ஒரு ஹிட் பார்சல்

காமெடி என்றாலும் பிரச்சனை இல்லை. ரஜினிக்கு தான் சூப்பராக காமெடி வருமே. அதனால் ஜெயிலர் கண்டிப்பாக பிளாக்பஸ்டராகும் என நம்பப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.