நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரோஷன் ரணசிங்க (27) சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
பிரதானமாக சமுத்திரத்திற்கு அருகில் காணப்படும் டி. எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், அம்பாறை மாவட்டத்தின் நெல் விவசாயத்திற்கு நீர் விநியோகிக்கும் பிரதான சமுத்திரமான இதன் தற்போதைய நிலை தொடர்பாக அம்பாறை மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் அமைச்சர் முன்னிலையில் தெளிவு படுத்தினார்.
இதன் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க, நீர்ப்பாசன பணிப்பாளர் சுதத் கமகே உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.