சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு சீரியல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தனை வருடங்களாக சினிமாவில் கிடைக்காத பேரையும் புகழையும் ஒரே சீரியலில் பிடித்துவிட்டார் மாரிமுத்து. அதுமட்டும் இல்லாமல் சம்பள விஷயத்திலும் இப்போது அவர் தான் நம்பர் 1 என சொல்லப்படுகிறது.
