Rajinikanth: மக்கள் விரும்பினால் வாங்கட்டும்: 'சூப்பர் ஸ்டார்' பட்டம் தொடர்பாக ரஜினி அண்ணன்.!

ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டம் தொடர்பான பஞ்சாயத்துக்கள் தான் கடந்த சில மாதங்களாக சோஷியல் முழுக்க பல விவாதங்களை கிளப்பி வருகிறது. அத்துடன் திரையுலகை சார்ந்தவர்களும் சூப்பர்ஸ்டார் பட்டம் தொடர்பாக பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் சூப்பர்ஸ்டார் பட்டம் தொடர்பாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மா கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இங்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.ஆண்டியப்பனூர் கூட்டு ரோட்டில் இருந்து கோயில் வரை சாலை வசதிகளை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். பொதுமக்களின் ஆசிர்வாதத்தால் என் தம்பி நடிகர் ரஜினி வளர்ந்து, மக்களுக்கு பல வகையில் சேவை செய்து வருகிறார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வரும் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பாப்பாத்தி அம்மன் அருளால் இப்படம் பெரிய அளவில் வெற்றியடையும். இந்தப்படத்தை அடுத்து லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். அதில் தற்போது ஐந்து படங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.

Thalaivar 170: ‘தலைவர் 170’ பட லுக்கா.?: மாஸான புதிய கெட்டப்பில் கெத்துக்காட்டும் ரஜினி.!

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மக்கள் வழங்கியது. மக்கள் விரும்பினால் அந்தப் பட்டத்தை யார் வேண்டுமானாலும் வாங்கட்டும் என தெரிவித்துள்ளார் ரஜினியின் சகோதரரான சத்யநாராயணன். அவரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ எங்கள் தலைவர் தான் எப்போதும் நிரந்தர சூப்பர் ஸ்டார் என விவாதம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. ‘ஜெயிலர்’ படம் அடுத்த வாரம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth: பட்டையை கிளப்ப போகும் ‘தலைவர் 170’: ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.