Ajit Doval will participate in the Ukraine peace talks on behalf of India today | உக்ரைன் அமைதி பேச்சு வார்தையில் இந்தியா சார்பில் இன்று அஜித் தோவல் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெட்டா: ரஷ்யா- .உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரு நாள் அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டில் (ஆக.,5 மற்றும் ஆக.,6) இந்தியா சார்பாக இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்கிறார்.

ரஷ்யா உக்ரைன் போர் 2022ல் துவங்கி ஒரு வருடத்திற்கு மேலாக நடத்து வருகிறது. இப்போரின் காரணமாக உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பேர் அண்டை நாடுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். இப்போரினை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகளின் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஆக.,5 மற்றும் ஆக.,6 நாட்களில் நடைபெறும் ரஷ்ய உக்ரைன் அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பங்கேற்கிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.