குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… நியாய விலைக் கடைகளில் இன்று முதல் மீண்டும் அமல்!

தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ தளத்தின் படி, மொத்தமுள்ள 39 மாவட்டங்களில் 34,793 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். மொத்த பயனாளிகள் என்று பார்த்தால் 7 கோடியை தாண்டிவிடும். தற்போது டிஜிட்டல் முறையில் குடும்ப அட்டைகள் மாறியுள்ளன.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்இதை சரியாக பயன்படுத்தும் வகையில் ஆதார், கைபேசி பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே பொருட்கள் வாங்க நியாய விலைக் கடைகளுக்கு சென்றால் அங்கிருக்கும் பயோமெட்ரிக் கருவிகளில் கைரேகை வைத்தால் போதும். எளிதாக அட்டைக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதுவும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் வந்த பிறகு இடம்பெயர்ந்து வசிப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.பயோமெட்ரிக் கருவிகள்கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் சொந்த ஊரில் இருந்து வெளியூர் சென்று வசிப்பவர்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பயோமெட்ரிக் கருவி சரியாக வேலை செய்யவில்லை எனில் பிரச்சினை தான். பொருட்கள் வாங்குவதையும், நுகர்வோரின் அட்டையிலும் பதிவு செய்வது சிக்கலாகி விடும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடங்கியது. இது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதையொட்டி விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு சிறப்பு முகாம்கள் மூலம் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
​கைரேகை பதிவுகள் மூலம் உறுதிஇதற்காக நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் கருவிகளை எடுத்து சென்றனர். மகளிர் உரிமை தொகை பெறுபவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைக்கு உரியவரா என கைரேகை மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த பணிகள் காரணமாக கடந்த சில வாரங்களாக நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகள் இல்லை.
​முதல்கட்டப் பணிகள் நிறைவுஇதனால் உள்ளூர் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன.
மீண்டும் ரெடியான நியாய விலைக் கடைகள்இதையடுத்து பயோமெட்ரிக் கருவிகள் மீண்டும் நியாய விலைக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வெளியூர் குடும்ப அட்டைதாரர்களும் கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியூட்டும் விஷயமாக அமைந்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்களை பலரும் இன்னும் வாங்காமல் இருக்கின்றனர். இவர்கள் நடப்பு மாதத்திற்கான பொருட்களை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.