வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியானது. இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்.,15ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அன்றைய தேதியில், நவராத்திரியின் முதல்நாள் என்பதால் போட்டி நடைபெறும் தேதி மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, போட்டியை அக்.15 தேதிக்கு பதிலாக ஒரு நாளுக்கு முன்னதாக அக்.,14ல் நடத்த திட்டமிடப்பட்டு அதன் அட்டவணையில் மாற்றம் செய்ய ஐ.சி.சி., சம்மதம் தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement