பொருளாதார சிரமங்களுக்கு உள்ளானவளுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்.

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு வேலைத்திட்டத்துடன் உலக உணவுத் திட்டத்தினால் வவுனியா மாவட்டத்தில் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்ற நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் மடுக்கந்தை, மயிலங்குளம் கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்களிற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50 கிலோ அரிசி, 20 கிலோ பருப்பு, 5 லீற்றர் தேங்காய் எண்ணெய் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு வவனியா மாவட்டச் செயலாளர் திரு.P.A.சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலாளர் T. திரேஸ்குமார், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் அசங்க குமார, WFP அதிகாரிகள் மற்றும் மேலும் சில அரச அலுவலகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.