சென்னை, : சேலத்தில் இருந்து, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு போயஸ் கார்டன் வந்த சிறுமி, அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், 10ம் வகுப்பு முடித்து விட்டு, வீட்டில் இருந்துள்ளார்.
இவர், ஆசிரியர் ஒருவரைப் பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்தார்.
நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, போயஸ்கார்டனில் உள்ள பிரபல நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்து, அவரைப் பார்க்க வேண்டுமென, அங்கிருந்த காவலாளிகளிடம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர்கள், தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியிடம் விசாரித்தனர்.
அதன்படி, பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள சிறுமியின் உறவினரை நேரில் வரவழைத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, நேற்று காலை அவரது உறவினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement