வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய இம்ரான்கான் மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்தது.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், இம்ரான் கான் 70. இவர் , பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார்.தொடர்ந்து, கடந்த ஓராண்டில் மட்டும், இம்ரான் கானுக்கு எதிராக, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
![]() |
இதற்கிடையே, ‘தோஷாகானா’ எனப்படும், அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.இதையடுத்து, லாகூரில் உள்ள வீட்டிலிருந்த இம்ரான் கானை கைது செய்த போலீசார், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனது வழக்கறிஞர் வாயிலாக, தண்டனையை நிறுத்தி வைக்க கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நேற்று அப்பீல் மனு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அமர் பரூக், இம்ரானின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்தார். முன்னதாக ராவல் பிண்டியில் உள்ள சிறைக்கு மாற்றக்கோரிய மனு ஆக.11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement