சென்னை: புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் கலர் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு, நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆளும் அரசுகள் தங்கள் விருப்பப்படி அரசுப் பேருந்துகளின் நிறத்தை மாற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்துகள் பச்சை நிறத்தில் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. பின்னர் புதிதாக […]
