அப்பாவோட மஞ்சள் துண்டு சென்டிமென்ட்ட ஃபாலோ பண்றீங்களா? ஸ்டாலினை கலாய்த்துவிட்ட கஸ்தூரி!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக எஸ்இடிசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மகளிருக்கு கட்டணம் இல்லா இலவச பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 8 கோட்டங்களில் சேதமடைந்த மற்றும் பழுதடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இதுவரை கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுக்கு தற்போது மஞ்சள் வண்ணம் தீட்டப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகள் அனைத்துமே மஞ்சள் நிறத்தில் உள்ளது. தனது அப்பாவான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மஞ்சள் துண்டு சென்டிமேன்ட் போலவே ஸ்டாலினுக்கும் மஞ்சள் நிற சென்டிமென்ட் வந்துவிட்டதா விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி அதை பளீச்சென கேட்டேவிட்டார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், முதல்வர் ஸ்டாலின் மாடர்ன் டீலக்ஸ் டிஎன்எஸ்டிசி பேருந்துகளை இன்று தொடங்கி வைத்துள்ளார். அதற்கு வாழ்த்துக்கள் நன்றி என்று குறிப்பிட்டுள்ள கஸ்தூரி, ஆனால் மஞ்சள் நிறம் என்பது நல்ல ஐடியா அல்ல என குறிப்பிட்டுள்ளார். அப்பாவின் மஞ்சள் துண்டு சென்டிமென்ட்டை மகன் ஃபாலோ செய்கிறாரா என்றும் கேட்டுள்ளார்.

மேலும் பள்ளி பேருந்துகள்தான் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்றும், நம்முடைய அரசு பேருந்துகளை சிஎஸ்கே ஃபேன் பேருந்துகள் போல மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும் கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த டிவீட் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.