
குடும்பத்திலிருந்து புதிய ஹீரோவை களமிறக்கும் தனுஷ்
‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்தபடம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷ் 51வது படமாக தெலுங்கு படமும், அதற்கடுத்து ஹிந்தி படங்களிலும் நடிக்கவுள்ளார். இந்த படங்களை முடித்த பின்னர் தனுஷ் தனது 3வது படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி தயாரிப்பாளர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் தனது அக்கா மகனை அறிமுகப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. கூடுதலாக இதில் தனுஷூம் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.