புதுடில்லி:தலைநகர் டில்லியில் சுதந்திர தின ஒத்திகை நடத்த இருப்பதால், மாநகரின் முக்கியச் சாலைகளில் இன்று காலை, மாநகரின் முக்கியச் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகரப் போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
அதை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் மார்க், லோதி சாலை, எஸ்.பி. முகர்ஜி மார்க், சாந்தினி சவுக் சாலை, நிஷாத்ராஜ் மார்க், எஸ்பிளனேட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலை, ராஜ்காட் – ஐ.எஸ்.பி.டி., வரையிலான சுற்றுச்சாலை, அங்கிருந்து ஐ.பி., மேம்பாலம் வரையிலான வெளிவட்டச் சாலை –ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சாலைகளில் இன்று காலை 4:00 மணி முதல் 11:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன ஓட்டிகள் சி -அறுகோணம், இந்தியா கேட், கோப்பர் நிகஸ் மார்க், மண்டி ஹவுஸ், சிக்கந்திரா சாலை, டபிள்யூ பாயின்ட், ஏ பாயின்ட், திலக் மார்க், மதுரா சாலை, பி.எஸ்.இசட். மார்க், நேதாஜி சுபாஷ் மார்க், நேரு மார்க், ஆகிய சாலைகளுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
நிஜாமுதீன் கட்டா மற்றும் காஷ்மீர் கேட் இடையேயான சுற்றுச்சாலை மற்றும் சலீம்கர் பைபாஸ் ஆகியவற்றை பொதுமக்கள் மாற்று வழியாக பயன்படுத்தலாம்
வடக்கு டில்லியிலிருந்து தெற்கு டில்லி செல்வோர் அரவிந்தர் மார்க், சப்தர்ஜங் சாலை, கமால் அதாதுர்க் மார்க், கவுடில்யா மார்க், அன்னை தெரசா கிரசன்ட், பார்க் தெரு, மந்திர் மார்க் மற்றும் ஜான்சி ராணி சாலை ஆகிய சாலைகளில் செல்லலாம்.
அதேபோல கிழக்கு டில்லியில் இருந்து -மேற்கு டில்லி செல்வோர் நிஜாமுதீன் கட்டா, பாரபுலா சாலை, எய்ம்ஸ் மேம்பாலம், சுற்றுச் சாலை, மதுரா சாலை, சுப்பிரமணிய பாரதி மார்க், ராஜேஷ் பைலட் மார்க், பிருத்விராஜ் சாலை மற்றும் சப்தர்ஜங் சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
பழைய இரும்புப் பாலம் மற்றும் சாந்திவன் செல்லும் கீதா காலனி பாலம் ஆகியவை மூடப்படும்.
நிஜாமுதீன் மற்றும் வஜிராபாத் பாலங்களுக்கு இடையே சரக்கு வாகனங்கள் ஆகஸ்ட் நேற்று நள்ளிரவே மூடப்பட்டது. இன்று காலை 11:00 அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மகா ராணா பிரதாப், ஐ.எஸ்.பி.டி., மற்றும் சராய் காலேகான் இடையே மாநிலங்களுக்கு இடையேயான பஸ்களுக்கும் அனுமதி கிடையாது.
டில்லி மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்கள், நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 11:00 மணி வரை ரிங் ரோட்டில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் ஜி.டி. சாலை, வஜிராபாத் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை -24 ஆகியவற்றில் செல்லும்.
செங்கோட்டை, ஜூம்மா மசூதி மற்றும் டில்லி பிரதான ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்