கானோ: நைஜீரியாவில் ராணுவ வாகனம் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 23 பேர் உட்பட 26 பேர் பலியாயினர்.
நைஜீரியா நாட்டின் மத்தியிலுள்ள ஆம்புஷ் பகுதியில் ராணுவத்தினருக்கும் கொள்ளையர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
ராணுவ வாகனம் மீது நடந்த துப்பாக்கிச்சண்டையில் மூன்று ராணுவ அதிகாரிகள் உட்பட 23 வீரர்கள் பொதுமக்கள் மூவர் உட்பட 26 பேர் பலியாயினர். எட்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச் சண்டையில் பலியான வீரர்களின் உடல்களை மீட்க சென்ற நைஜீரிய விமானப்படையின் ‘எம்.ஐ. – 171’ ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது. இதில் 11 ராணுவ வீரர்களின் உடல்கள் ஏழு காயமடைந்த வீரர்கள் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement