கறுவா அபிவிருத்திக்காக புதிய திணைக்களமொன்றை ஸ்தாபிப்பிதற்காக ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்ததுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் நேற்று (15) அரசாங்கத் தகலவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கறுவா சிறு ஏற்றுமதிப் பயிருக்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு தனியான திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதாகவும், இது எக்காரணத்திற்காகவும் பெருமளவான நபர்கள் காணப்படும் புதிய திணைக்களமல்லாது விவசாயத் திணைக்களத்தின் விடயப் பிரிவாக தற்போதைக்கு கறுவா உற்பத்தி தொடர்பாக தனியாக செயற்படும் திணைக்களமாக நியமிப்பதாகவும் வலியுறுத்தினார்.
அதற்காக புதிய திணைக்களம், கூட்டுத்தாபனம், நியதிச் சபையைப் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தின் கொள்கையல்லாதது என்றும் மேலும் சுட்டிக்காட்டினார்.
கறுவா, இலங்கையின் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமல்லாத மிகவும் பாரிய முக்கியத்துவத்துடன் காணப்படும் ஏற்றுமதிப் பயிர் என்றும் நாட்டினுள் கறுவா உற்பத்தியை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையின் ஏற்றுமதி சீராக்கல், ஏற்றுமதிக்காக அதிக பெறுமதி சேர்த்தல், ஏற்றுமதியை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி சந்தை விரிவாக்கத்திற்கு அத்தியவசியமான செயற்பாடு என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
சிறு ஏற்றுமதிப் பயிராக கறுவா பாரிய அந்நியச் செலாணி வருமானத்தை ஈட்டித் தருவதுடன் அதற்காக பெறுமதி சேர்த்தால் எமக்கு சர்வதேச சந்தையில் தரமான கறுவா காணப்படும் எமது நாட்டிற்கு ஏற்படும் அதிஷ்டத்தை அடிப்படையாக வைத்து பாரிய அந்நியச் செலாவணியை ஈட்டுவதன் ஊடாக நாட்டின முடிவடைந்த, வருமானத்தை, வேலை வாய்ப்பு போன்றவற்றை அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் விபரித்தார்.
அதற்காக உற்பத்தி ஏற்றுமதிக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கு, கறுவா உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துதுவதற்கும், பெறுமதியை சேர்ப்பதற்கும், உற்பத்தி பல்வகைப்படுத்தல் போன்ற விடயங்களுக்காக கறுவா உற்பதிதியாளர்கள் மற்றும் வழங்குநர்கள் போன்ற ஏற்றுமதியாளர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்காக இக் கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தை ஸ்தாபிப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.