புதுடில்லி, அசாமில் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் முடிந்து, அது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், கடைசியாக 1976ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.
இதையடுத்து, இங்கு மீண்டும் தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளுக்குப் பின், கடந்த 11ம் தேதி தொகுதி மறுவரையறை தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில், மாநிலத்தில், 126 சட்டசபை தொகுதிகள் மற்றும் 14 லோக்சபா தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதே நேரத்தில், 19 சட்டசபை தொகுதிகள், ஒரு லோக்சபா தொகுதியின் பெயர் மாற்றப்பட்டுஉள்ளது.
மாநிலத்தில், 19 சட்ட சபை மற்றும் இரண்டு லோக்சபா தொகுதிகள் பழங்குடியினருக்கும், ஒன்பது சட்டசபை மற்றும் ஒரு லோக்சபா தொகுதி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுடன், இந்த தொகுதி மறுவரையறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement