காலை உணவுத்திட்ட விரிவாக்கம்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு!

காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அடுத்தடுத்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

கல்வியும், சுகாதாரமும் தான் இந்த அரசின் இரு கண்கள் அதற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வரும் நிலையில் நேற்று அவர் அறிவித்த காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்பது, கல்வியையும், சுகாதாரத்தையும் உள்ளடக்கிய ஒன்று தான்.

வறுமை, தொலை தூரத்திலிருந்து பள்ளிக்கு வருவது, குடும்பச் சூழல் ஆகியவை காரணமாக பல குழந்தைகள் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் அவர்களது உடல் நலமும் உள வளமும் பாதிக்கப்படுவதோடு கல்வியும் பாதிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினையை சரி செய்யவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது காலை உணவுத் திட்டம். முதற்கட்டமாக சில தொடக்கப்பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்ட இத்திட்டம் படிபடிப்படியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

விருதுநகரில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே இரும்பு பாதையில் சோதனை

வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும், 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி கலைஞர் கருணாநிதி கல்வி பயின்ற திருவாரூர் அருகே திருக்குவளை கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியில் இத்திட்டம் தொடங்கி வைக்க்கப்பட உள்ளது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் கடிதம் மூலம் இத்திட்டத்திற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் பள்ளிக் கல்வித்துறை சார்பாகவும் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் சென்றுள்ளன. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கப்பள்ளி) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகளுக்கு செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.