மக்களே எச்சரிக்கை… இன்னைக்கு நைட்டும் நீண்ட சம்பவம் இருக்காம்… தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

பகல் நேரங்களில் வெயில்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது.

இடியுடன் பலத்த மழை

இதனால் இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய பயங்கர இடி மின்னலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நள்ளிரவு முதல் பலரும் தூக்கத்தை தொலைத்தனர். கொட்டி தீர்த்த மழையால் மறுநாள் எப்படியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என மாணவ மாணவிகள் எதிர்பார்த்தனர்.

தமிழ்நாடு வெதர்மேன்

ஆனால் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். இதனால் பள்ளி மாணவ மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு நீண்ட மழை இரவாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மழை

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், தெற்கு மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளில் இரவு நீண்ட மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் தினசரி மழை தொடர்கிறது என்றும் நேற்று வடசென்னையில் மழை பெய்த நிலையில் தற்போது தென் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வரிசையாக நிற்கும் மேகங்கள்

மேகங்கள் வரிசையாக நிற்கிறது என்றும் இவை மத்திய மற்றும் தென் சென்னைக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் புதிய காற்றால் சென்னை முழுவதும் மழை பெய்யலாம் என்றும்கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வேறு எங்கும் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் சோலோ ஷோ என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.