மும்பை: வங்கிகள், கடன்களை வசூலிக்கும்போது, கட்டணங்கள் பற்றிய வெளிப்படைத் தன்மை தேவை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேலும், மாறுபட்ட வட்டி முறையில் இருந்து நிலையான வட்டிக்கு மாறும் போது கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும். வட்டி முறையை மாற்றும்போது அபராதம் என கூடுதலாக கட்டணம் வசூலிக்காமல், விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
வட்டி முறையை நிலையான வட்டி முறைக்கு மாற்றும்போது, மாதத்தவணையை மாற்றிக் கொள்ளவோ , தவணை காலத்தை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது இரண்டையும் மாற்றியமைத்து கொள்ளவோ, கடன் வாங்கியவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அனுமதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement