அம்பாலா:தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில், கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண் குழந்தை உடலை, தெருநாய் சாப்பிடுவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹரியானா மாநிலம் அம்பாலா கண்டோன்மென்ட் அரசுக் கல்லூரி அருகே கழிவு நீர் கால்வாய் நேற்று, ஒரு நாய் குழந்தை உடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அந்த வழியாகச் சென்ற சிலர் அதைப் பார்த்த் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நாயை அடித்து விரட்டினர்.
தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் கிடந்த அந்தப் பெண் குழந்தை உடல் முழுதும் கழிவுநீராக இருந்தது. கால்வாயில் கிடந்த உடலை, நாய் மோப்பம் பிடித்து இழுந்து வந்திருப்பதை உணர்ந்தனர்.
தகவல் அறிந்து போலீசார் வந்து குழந்தை உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை இறந்தே பிறந்ததா அல்லது வாய்க்காலில் வீசப்பட்டதால் இறந்ததா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியும் என போலீசார் கூறினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரித்து வருகின்றனர். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் பரவிய இந்தக் தகவலால் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement