Sai Pallavi: விபூதியை விரும்பி சாப்பிடும் சாய் பல்லவி: டேஸ்ட் சூப்பரா இருக்காம்

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோயினானவர் சாய் பல்லவி. தமிழ் பெண்ணான அவர் பிரேமம் மலையாள படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமானார். அதன் பிறகே சாய் பல்லவியின் கெரியர் பிக்கப் ஆனது.

சிகரெட் வச்சி மட்டும் தான் ஸ்டைல் காட்டணுமா? அத மிஸ் யூஸ் பண்ணாதீங்க.!
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சாய் பல்லவி கூறியது பற்றி தற்போது பேசப்படுகிறது. அந்த பேட்டியில் சாய் பல்லவி கூறியதாவது,

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எனக்கு விபூதி சாப்பிட பிடிக்கும். என் ஹேண்ட்பேக்கில் எப்பொழுதும் விபூதி வைத்திருப்பேன். எனக்கு விபூதியின் சுவை பிடித்திருக்கிறது என்றார்.

விபூதியை போய் சாப்பிடுகிறாரா என சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் சிலரோ, சாய் பல்லவி சொல்வதில் தவறு எதுவும் இல்லை. விபூதி நன்றாகத் தான் இருக்கும். நாங்களும் சாப்பிடுவோம் என்கிறார்கள்.

சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

எஸ்.கே. 21 படத்திற்கு புது ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று தான் மாவீரன் பட நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகளில் குல்லாவுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். சும்மா நான்கு காட்சிகள், இரண்டு டூயட்டில் வந்துவிட்டு போகும் நடிகை சாய் பல்லவி இல்லை. தன் கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வார்.

அப்படி இருக்கும்போது அவர் எஸ்.கே. 21 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்றால் சாய் பல்லவியின் கதாபாத்திரம் நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Jailer Collection:8 நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 235.65 கோடி: தொடரும் ஜெயிலரின் வசூல் வேட்டை

சாய் பல்லவி தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏதாவது நிகழ்ச்சி மேடையில் சாய் பல்லவியின் பெயரை யாராவது சொன்னால் போதும் ரசிகர்கள் அப்படி மகிழ்ச்சி கரகோஷம் செய்வார்கள். அந்த அளவுக்கு சாய் பல்லவி மீது பாசம் வைத்திருக்கிறார்கள்.

சாய் பல்லவியின் பெயரை சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மூன்று விஷயம் தான். ஒன்று அவரின் மேக்கப் இல்லா அழகிய முகம், இரண்டு நீளமான தலைமுடி, மூன்று அவர் ரப்பர் பாடி போன்று டான்ஸ் ஆடுவது.

டான்ஸ் ஆடுவதில் தான் சாய் பல்லவிக்கு அதிக விருப்பம் இருந்தது. ஆனால் அவர் நடிக்க வந்துவிட்டார். அவர் படங்களில் டான்ஸ் எப்பொழுதுமே சிறப்பாக இருக்கும். மாரி 2 படத்தில் அவரும், தனுஷும் சேர்ந்து டான்ஸ் ஆடிய ரவுடி பேபி பாடல் சூப்பர் ஹிட்டானது.

பிரபுதேவா சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸை தனுஷும், சாய் பல்லவியும் பக்காவாக ஆடியிருந்தார்கள்.

தற்போது சாய் பல்லவி டிரெண்டிங்கில் இருக்கிறாார். அதற்கு காரணம் நாக சைதன்யாவின் படம். Chandoo Mondeti இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது. சாய் பல்லவியை ஹீரோயினாக்க விரும்புகிறாராம் இயக்குநர். ஆனால் அவரின் குழுவோ கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாமே என்கிறதாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.