வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்-அமெரிக்காவுக்கு, தைவான் துணை அதிபர் பயணம் மேற்கொண்டதையடுத்து, அந்த நாட்டை எச்சரிக்கும் வகையில், சீனப் படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
நம் அண்டை நாடான சீனாவில், 1949ல் நடந்த உள்நாட்டு கலவரத்தைத் தொடர்ந்து, தைவான் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால், தைவானை தன் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
மற்ற நாடுகளுடன் தைவான் துாதரக உறவுகள் வைப்பதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தைவான் துணை அதிபர் வில்லியம் லாய், சமீபத்தில் தென் அமெரிக்க நாடான பராகுவேவுக்கு சென்றார். மேலும், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துஇருந்தது. இதைத் தொடர்ந்து, தைவானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அந்நாட்டில், சீன ராணுவம் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டது.
போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் தைவானில் நிலைநிறுத்தப்பட்டன. மேலும், சீன ராணுவமும் அங்கு போர் பயிற்சியில் ஈடுபட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement