தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு… பிரதமர் மோடி பங்கேற்பு!

15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளக்கிய குழுவாகும். இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிக்ஸ் உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நேரடியாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். இதன் மூலம் மூன்றாவது முறையாக தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.

வனிதா அக்காவின் ‘ஆல் இன் ஆல்’ ஜோவிகாவுக்கு இத்தனை வயசா… பெருமூச்சுவிடும் நெட்டிசன்ஸ்!

மேலும் பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான தூதரக உறவின் 30 வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கிரீஸ் செல்கிறார். இதன் மூலம் 40 ஆண்டுகளில் பழமையான நாட்டைப் பார்வையிடும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் மோடி.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 2023 ஆகஸ்ட் 22-24 வரை நான் தென் ஆப்பிரிக்கா குடியரசுக்கு செல்கிறேன். தென் ஆப்பிரிக்கத் தலைமையில் ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் 25 ஆகஸ்ட் 2023 அன்று கிரீஸின் ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறேன். இந்த புராதன நிலத்திற்கு நான் முதல் முறையாக செல்ல உள்ளேன். 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதியில் அடியோடு குறைந்த கூட்டம்… ஒரு நாளைக்கு 4000 பேர்தான்!

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். மேலும் பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.